7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் திருப்பதியாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் அந்தோணி ராஜ் (வயது 35). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அடிதடி வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவரை விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவரை நேற்று கைது செய்தனர்.