'லிப்ட்' கேட்பது போல் நடித்து பணம் பறித்தவர் கைது
‘லிப்ட்’ கேட்பது போல் நடித்து பணம் பறித்தவர் கைது
சிவகாசி
சிவகாசி பாரதிநகரை சேர்ந்தவர் விக்டர்ஞானராஜ் (வயது 26). பட்டாசு தொழிலாளியான இவர் நாரணாபுரம்-அனுப்பன்குளம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விஸ்வநத்தம் முருகையாபுரத்தை சேர்ந்த ஜான் கென்னடி என்பவர் லிப்ட் கேட்பது போல் சைகை செய்துள்ளார். இதனால் விக்டர்ஞானராஜ் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஜான்கென்னடியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றவுடன் ஜான்கென்னடி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விக்டர்ஞானராஜ் கழுத்தி வைத்து மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.200-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஜான்கென்னடி (25) என்பவரை கைது செய்தனர்.