டாஸ்மாக்கடையில் கொள்ளையடித்த ஒருவர் கைது

டாஸ்மாக்கடையில் கொள்ளையடித்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-25 19:25 GMT

காரியாபட்டி, 

திருச்சுழியில் உள்ள அரசு டாஸ்மாக்கடையில் முக மூடி கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ஊழியர்களை தாக்கி ரூ.6.47 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றனர். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புைடய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்