திருக்கோவிலூர் அருகேகஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டவர் கைது
திருக்கோவிலூர் அருகே கஞ்சா போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே சிவனார்தாங்கல் கூட்டு ரோட்டில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் போதையில் நின்று கொண்டு பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர், நெடுமுடையான் கிராமத்தை சேர்ந்த பெரியதம்பி மகன் அய்யனார் (வயது 43) என்பதும், கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அய்யனாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.