அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தனர்

Update: 2023-07-26 21:05 GMT

மேலூர்

மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி அழகர் (வயது 37). இவர் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து தேவகோட்டைக்கு சென்ற அரசு பஸ்சில் மேலூருக்கு வந்துள்ளார். மேலூரில் யூனியன் அலுவலகம் அருகே வந்தபோது படிக்கட்டில் நின்ற அழகர் தவறி கீழே விழுந்து அதே பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி இறந்துபோனார். இந்த விபத்து குறித்து மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்