கொலை வழக்கில் கைதானவர் கீழே விழுந்து காயம்

கொலை வழக்கில் கைதானவர் கீழே விழுந்து காயம் அடைந்தார்.

Update: 2023-01-17 22:18 GMT

முன்னீர்பள்ளம்:

நெல்லை அருகே உள்ள மேலச்செவல் கோவில் ஊழியர் கிருஷ்ணன் என்ற கிட்டுச்சாமி (வயது 55). கடந்த 15-ந் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியைச் சேர்ந்த கொம்பையா, அய்யப்பன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் அய்யப்பன் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது தவறி கீழே விழுந்ததாகவும், இதில் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. காயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்