அரக்கோணத்தில் மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-08-19 18:26 GMT

அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் பகுதியில் அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அரசின் அனுமதியின்றி முரம்பு மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து தாசில்தார் சண்முகசுந்தரம் லாரியை பறிமுதல் செய்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். ஆய்வின் போது கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்தி, பிரசாந்த் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்