சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்

அரவக்குறிச்சி அருகே சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்து நாசமானது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Update: 2022-09-26 18:54 GMT

கொழுந்துவிட்டு எரிந்த லாரி

ஆந்திராவில் இருந்து ஒரு லாரி சிமெண்டு மூட்டைகளை ஏற்றி கொண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நோக்கி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஆண்டிபட்டி கோட்டை மேம்பாலம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது.பின்னர் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைக்கண்ட டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார். இருப்பினும் தீ லாரி முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

போராடி அணைத்தனர்

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அரவக்குறிச்சி மற்றும் வேடசந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து போராடி அணைத்தனர். இருப்பினும் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி தாசில்தார் செந்தில்குமார் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்