பாறையில் ஓய்வெடுத்த சிறுத்தை

பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் உள்ள பாறையில் சிறுத்தை ஓய்வெடுத்தது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.

Update: 2023-07-18 21:45 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் உள்ள பாறையில் சிறுத்தை ஓய்வெடுத்தது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.

சிறுத்தை

பந்தலூர் தாலுகா குந்தலாடி அருகே பாக்கனா, புத்தூர் வயல் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் வளர்த்து வரும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை சிறுத்தை ஊருக்குள் புகுந்து கடித்து கொன்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பாக்கனா பகுதிக்குள் சிறுத்தை புகுந்து வருகிறது.

அங்குள்ள தேயிலை தோட்டத்தில் தேயிலை செடிகளின் நடுவே உள்ள பாறையில் சிறுத்தை படுத்து ஓய்வெடுத்தது. இதனால் தொழிலாளர்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ் பிரவீன்சன், வன காப்பாளர் மில்டன் பிரபு மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். சிறுத்தை ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மோட்டார் சைக்கிள்கள் சேதம்

கூடலூர் பகுதியில் தினமும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனால் பொதுமக்களின் வீடுகள், பயிர்கள் சேதமடைந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலை கெவிப்பாரா பகுதியில் காட்டு யானை பொதுமக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. அப்பகுதியில் உள்ள மரத்தில் இருந்த பலா காய்களை பறித்து தின்றது. பின்னர் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கார், மோட்டார் சைக்கிள்களை யானை தாக்கி சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து அதிகாலை வரை அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை, அதன் பின்னர் அங்கிருந்து சென்றது. 

Tags:    

மேலும் செய்திகள்