மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கிய மீன்கள்

வேதாரண்யத்தில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் மீன்கள் சிக்கியது. இந்த மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-07-07 16:56 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் மீன்கள் சிக்கியது. இந்த மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதிக அளவில் சிக்கிய மீன்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் வானவன்மாகதேவி, கோடியக்கரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து நேற்று அதிகாலை 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். பின்னர் மீனவர்கள் மதியம் கரை திரும்பினர்.

கரை திரும்பிய ஆறுகாட்டுத்துறை பைபர் படகு மீனவர்களுக்கு அதிக அளவு மீன்கள் சிக்கியது. இதில குறிப்பாக ஷீலா மீன்கள் அதிகம் கிடைத்தன. ஷீலா மீன் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

மீனவர்கள் மகிழ்ச்சி

கடந்த சில நாட்களாக கிலோ ரூ.500 விற்ற ஷீலா மீன் நேற்று ரூ. 1,000-க்கும். வாவால் மீன் ரூ.1,200-க்கும, காலா மீன் ரூ.700-க்கும், இறால் ரூ.300-க்கும், நண்டு 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதிக அளவில் மீன்கள் கிடைத்தாலும், மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறிகையில், கடந்த ஒரு வாரமாக பலத்த காற்று வீசியதால் மீனவர்கள் வலையில் மீன்கள் சிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அதிக அளவில் மீன்கள் சிக்கின. தற்போது மீன்கள்அதிக அளவில் சிக்குவதாலும், அதற்கு நல்ல விலை கிடைப்பதாலும் நாளை(இன்று) அதிக அளவில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்வோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்