வேலைதேடி சென்றவர் ரெயிலில் அடிப்பட்டு சாவு

ஜோலார்பேட்டை அருகே வேலைதேடி சென்றவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்தார்.

Update: 2022-09-18 16:06 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த கன்னட அல்லி கூட்ரோடு பகுதியை சேர்ந்த மாதவன் என்பவரின் மகன் விமல் (வயது 38). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை, வேலூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலை தேடி சென்றுள்ளார். இந்த நிலையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே பார்சம்பேட்டை யார்டு பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரெயிலில் பயணம் செய்தபோது தவறி விழுந்து இறந்தாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்