பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற ஓட்டல் தொழிலாளி போக்சோவில் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற ஓட்டல் தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2023-02-09 18:51 GMT

8-ம் வகுப்பு மாணவி

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42), ஓட்டல் தொழிலாளி. இவர் கடந்த 2-ந்தேதி 13 வயதுடைய 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியின் கையை பிடித்து இழுத்து, அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி சக்திவேலின் கையை தட்டி விட்டு தப்பி தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

ஆனால் மனதளவில் பாதிக்கப்பட்ட அச்சிறுமி மறுநாள் தனது வகுப்பு ஆசிரியையிடம் கூறி அழுதுள்ளார். இதனை கேட்டதும் அந்த ஆசிரியை இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

போக்சோவில் கைது

இதையடுத்து தலைமையாசிரியர் நேற்று காலை இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தார்.

பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களில் செயல்படும் பெண்கள் உதவி மையத்தை 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். புகார் மற்றும் தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்