பந்தலூர் அருகே சிவன் கோவில் கருவறையில் குழி தோண்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு

பந்தலூர் அருகே சிவன் கோவில் கருவறையில் குழி தோண்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு

Update: 2023-07-24 19:30 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே நெல்லியாளம் குன்றில் கடவு பகுதியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. தற்போது பாழடைந்து உள்ள இந்த கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவன் சிலை காணாமல் போனது. இதையடுத்து கோவிலை புனரமைத்து சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதோடு, மாதந்தோறும் கோவில் நிர்வாகிகள் சார்பில் விளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கோவில் நிர்வாகிகள் விளக்கு பூஜை செய்வதற்காக சிவன் கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவில் கருவறையில் 7 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு இருந்தது. இதனை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபற்றி அறிந்ததும் அந்தப்பகுதியை சேர்ந்த பக்தர்களும் அங்கு திரண்டனர்.

மேலும் இதுபற்றி அறிந்ததும் தேவாலா போலீசார் அங்கு சென்று, விசாரணை நடத்தினார்கள். தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவுபடி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். கோவிலில் இருந்து புராதான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்