தனியார் பள்ளியில் ஹெலிகாப்டர் இறங்கியதால் பரபரப்பு
திருவலம் அருகே தனியார் பள்ளியில் ஹெலிகாப்டர் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவலம் பொன்னையாறு அருகே தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நேற்று காலை ஒரு ஹெலிகாப்டர் வந்து இறங்கியது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் வியப்படைந்து ஹெலிகாப்டர் வந்திருந்ததை ஆச்சரியத்துடன் பார்த்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ''சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையின் உயர் பொறுப்பில் இருக்கும் நபர் ஒருவர் தொழிற்சாலையை பார்வையிட ஹெலிகாப்டரில் வந்தார். ஹெலிகாப்டர் இறங்குவதற்கு முறையான அனுமதி பெறப்பட்டிருந்தது. தொழிற்சாலையை பார்வையிட்டபின் மதியம் அந்த அதிகாரி ஹெலிகாப்டரில் திரும்பினார்'' என்றார்திடீரென்று பள்ளியில் ஹெலிகாப்டர் இறங்கியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.