ஆரோக்கியமான உடலுக்கு சரியான உணவு அவசியம்

ஆரோக்கியமான உடலுக்கு சரியான உணவு அவசியம் என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

Update: 2022-08-14 18:43 GMT

சிவகாசி, 

ஆரோக்கியமான உடலுக்கு சரியான உணவு அவசியம் என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

உணவுத்திருவிழா

சிவகாசி இந்து நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை இணைந்து நெடுநடைப் பயணம் மற்றும் உணவு திருவிழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்க சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தார். கலெக்டர் மேகநாதரெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அனைத்து மாவட்டங்களிலும் உணவுத்திருவிழா நடைபெற்று வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் மூலம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களின் உணவுப் பொருள் தயாரிப்புகளும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் பாரம்பரிய உணவுப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சாதிக்க முடியும்

ஆரோக்கியமான உணவுகளை சரியான அளவு எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழ முடியும். ஆரோக்கியமான உடலுக்கு சரியான உணவு அவசியமாகிறது. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் வாழ்வில் எதையும் சாதிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சப்-கலெக்டர் பிருத்திவிராஜ், மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, யூனியன் தலைவர் முத்துலட்சுமி விவேகன்ராஜ், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் கழுசிவலிங்கம், தாசில்தார் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்