பம்பு ஆபரேட்டர்கள் கூட்டம்

பாளையங்கோட்டையில் பம்பு ஆபரேட்டர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-28 18:37 GMT

நெல்லை கிராமப்புற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் பரமசிவன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மாடசாமி முன்னிலை வகித்தார். செயலாளர் மணி வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட தலைவர் பரமசிவன் பேசும்போது, 'கொரோனா காலத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண தொகையான ரூ.15 ஆயிரத்தை வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும். அரசு அதிகாரிகளுக்கு வழங்குவது போல் பம்பு ஆபரேட்டர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது' என்றார்.

இந்த கூட்டத்தில் மானூர் ஒன்றிய தலைவர் மணி, நாங்குநேரி ஒன்றிய தலைவர் ஜான்சன், களக்காடு ஒன்றிய தலைவர் இமாம், நெல்லை ஒன்றிய தலைவர் பொன்னுதாய், பாளையங்கோட்டை ஒன்றிய பொருளாளர் அய்யப்பன், அமைப்பாளர் செந்தில்வேல்முருகன், பம்பு ஆபரேட்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்