பழனி அருகே பழங்குடியின மக்களுக்கான குறைதீர்க்கும் முகாம்

பழனி அருகே பழங்குடியின மக்களுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

Update: 2022-09-09 19:12 GMT

பழனி வருவாய்த்துறை சார்பில், பழங்குடியின மக்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வரதமாநதி அணை அருகே உள்ள குட்டிக்கரடு பகுதியில் நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் சசிக்குமார், துணை தாசில்தார் சஞ்சய்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் ஆதார் அட்டை, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பழங்குடியின சாதி சான்றிதழ் கேட்டு அப்பகுதி மக்கள் மனுக்கள் அளித்தனர். பின்னர் இந்த மனுக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. தெரிவித்தார்.

மேலும் பழனி பகுதியை சேர்ந்த வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டு, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களிடம் கால்நடை வளர்க்க கடன் வழங்குவது தொடர்பாக விண்ணப்பம் பெற்றனர். இதற்கிடையே தங்கள் பகுதியில் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என அப்பகுதி மக்கள் ஆர்.டி.ஓ.விடம் முறையிட்டனர். அதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. சிவக்குமார் குட்டிக்கரடு பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் அங்கு அடிப்படை வசதிகளை செய்ய ஆயக்குடி பேரூராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்