புதர் மண்டி கிடக்கும் மைதானம்

புதர் மண்டி கிடக்கும் மைதானத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-22 18:38 GMT

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பெரிய மைதானம் உள்ளது. இந்த மைதானம் நகராட்சி எல்லையின் முடிவில் அமைந்துள்ள இந்த மைதானம் பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று அதிகளவில் புதர் மண்டி உள்ளது. அப்பகுதிகளில் கொடிய விஷமுள்ள பாம்புகள், பூச்சிகள் ஊர்ந்து வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு அச்சமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மைதானத்தில் உள்ள புதர்களை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்