சிதம்பரத்தில் ரெயில் மோதி பட்டதாரி வாலிபர் பலி

சிதம்பரத்தில் ரெயில் மோதி பட்டதாரி வாலிபர் பலியானார்.

Update: 2022-10-09 18:45 GMT

சிதம்பரம், 

ரத்த காயங்களுடன் வாலிபர் பிணம்

சிதம்பரம் கொத்தங்குடி பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடலில் பலத்த ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைபார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி சிதம்பரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே இருப்புப்பாதை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

ரெயில் மோதியதில் பலி

விசாரணையில், இறந்து கிடந்தவர் சிதம்பரம் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீதாராமன் மகன் சபரி(வயது 22) என்பதும், பி.எஸ்சி. படித்து விட்டு வீட்டில் இருந்துவந்ததும் தெரியவந்தது. நேற்று முன்தினம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் அவருடைய அக்காவிற்கு பிறந்த குழந்தையை பார்த்து விட்டு சென்றவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, திருப்பதியில் இருந்து ராமேசுவரம் நோக்கி சென்ற ரெயில் மோதி பலியானதும் தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டதாரி வாலிபர் ரெயில் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்