விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை
விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 31). எம்.காம் பட்டதாரியான இவர் பல்வேறு நிறுவனங்களுக்கு கணக்குகள் எழுதிக்கொடுத்தும், வரிகள் தாக்கல் செய்தும் வந்துள்ளார். இந்தநிலையில் கடன் தொல்லையால் மனவேதனை அடைந்த அவர் விஷத்தை குடித்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.