விபத்தில் காயமடைந்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர் சாவு
சங்கரன்கோவில் அருகே விபத்தில் காயமடைந்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 75). ஓய்வுபெற்ற அரசு ஆஸ்பத்திரி ஊழியர். இவர் கடந்த மாதம் 28-ந் தேதி சங்கரன்கோவிலில் இருந்து குருக்கள்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குருக்கள்பட்டியில் மோட்டார் சைக்கிள் திரும்பும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ரத்தினவேல் மீது மோதியது. இதில் காயம் அடைந்த ரத்தினவேல் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ரத்தினவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக சின்னகோவிலாங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.