புஞ்சைபுளியம்பட்டி அருகே ரோட்டோர பள்ளத்தில் அரசு பஸ் இறங்கியது- 12 பேர் காயம்
புஞ்சைபுளியம்பட்டி அருகே ரோட்டோர பள்ளத்தில் அரசு பஸ் இறங்கியது- 12 பேர் காயம்
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து தனியார் டவுன் பஸ் ஒன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை மேட்டுப்பாளையம் ஆலங்கோம்பையை சேர்ந்த ராமசாமி (வயது 40) என்பவர் ஓட்டி சென்றார். புஞ்சைபுளியம்பட்டி மாதம்பாளையம் அண்ணமார் கோவில் அருகே பஸ் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பள்ளத்தில் இறங்கி நின்றது.
இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி பயணிகள் 10 பேர் லேசான காயம் அடைந்தனர். 2 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 12 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.