கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டார்.

Update: 2023-01-05 18:24 GMT

கரூர் அருகே உள்ள சங்கரம்பாளையம் கிராமத்தில் உள்ள 70 அடி ஆழ கிணற்றில் ஆடு ஒன்று தவறி விழுந்து தத்தளித்தது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த ஆட்டை மீட்க போராடியும், முடியவில்லை. இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் கயிறு மூலம் கிணற்றில் இறங்கி அங்கு தத்தளித்து கொண்டிருந்த ஆட்டை உயிருடன் மீட்டனர். பின்னர் ஆடு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்