போக்சோவில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
போக்சோவில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருச்சி பீமநகர் பஞ்சுக்கிடங்கு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). இவர் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் கொண்டவர் என்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்திவேதவல்லி பரிந்துரை செய்தார். அதன்பேரில் செந்தில்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா உத்தரவிட்டார்.