பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விவசாயி தற்கொலை
தேனி அருகே பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
தேனி அருகே உள்ள சாலிமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 62). விவசாயி. இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகாத விரக்தியில் விவசாய பயன்பாட்டுக்காக வாங்கி வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்புராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய மகன் முத்துராஜ் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.