குமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

Update: 2023-05-31 18:45 GMT

குளச்சல், ஜூன்.1-

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

மீன்பிடி தடைக்காலம்

மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் இந்த தடைக் காலம் 2 பருவ காலமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி, சின்னமுட்டம் பகுதிகளில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமங்களில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

இதன்படி குமரி மேற்கு கடற்கரை பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது. ஆனால் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. அவை மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. மீன் பிடி தடைக்காலத்தில் கட்டுமரங்கள், பைபர் வள்ளங்களில் மீனவர்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்