தைலமர தோட்டத்தில் தீ விபத்து; ஒரு ஏக்கர் எரிந்து நாசம்

தைலமர தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு ஏக்கர் எரிந்து நாசமானது.

Update: 2023-07-29 18:50 GMT

ஆலங்குடி அருகே கோவிலூரை சேர்ந்த கோபால் மற்றும் ஆறுமுகம் ஆகியோருக்கு சொந்தமான தைல மர தோட்டத்தில் நேற்று திடீரென தீப்பற்றி மள மளவென எரிந்தது. இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக ஆலங்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் குழந்தைராசு தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் ஒரு ஏக்கரில் இருந்த தைல மரங்கள் எரிந்து நாசமானது.

Tags:    

மேலும் செய்திகள்