சங்கராபுரம் அருகே கரும்பு தோட்டத்தில் தீ விபத்து

சங்கராபுரம் அருகே கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-07-12 17:21 GMT


சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள அரியலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாவாடை மகன் கோவிந்தசாமி. இவர் அதே பகுதியில் 3 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். நேற்று பிற்பகல் திடீரென்று இந்த கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இதில் 2 ஏக்கர் கரும்பு சோகை எரிந்து நாசமாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்