சோழவந்தான் அருகே வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டரில் தீ
சோழவந்தான் அருகே வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீப்பிடித்து எரிந்தது
சோழவந்தான்
சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவருடைய வயலில் நெல் அறுவடை செய்து அங்குள்ள வைக்கோலை டிராக்டர் மூலம் ஏற்றி சாலைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது வயலின் குறுக்கே சென்ற மின் வயர் டிராக்டரில் ஏற்றி வந்த வைக்கோல் மீது உரசியது. இதில் வைக்கோல் தீப்பிடித்து மளமளவென்று எரிந்தது. இதைக் கண்ட விவசாயிகள் சோழவந்தான் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரூபன், போக்குவரத்து அலுவலர் பழனிமுத்து மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீப்பிடித்து கொண்டிருந்த டிராக்டரில் இருந்த வைக்கோலை மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் டிராக்டரில் இருந்த வைக்கோல் எரிந்து சேதம் அடைந்தது.