திண்டிவனத்தில்அலங்கார பொருள் கடையில் தீ விபத்துரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்

திண்டிவனத்தில் அலங்கார பொருள் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.

Update: 2023-07-16 18:45 GMT


திண்டிவனம், 

திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்தவர் தம்பிதுரை. இவர் திருமணம் நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம், வரவேற்பு வளைவுகள் அமைப்பது மற்றும் பூ ஜோடித்து கொடுக்கும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல், இரவு 11 மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

நள்ளிரவு 1 மணிக்கு திடீரென கடையில் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ கடை முழுவதும் பற்றி எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்து தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அவா்களால் முடியவில்லை.

இதனிடையே தகவல் அறிந்த திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

ரூ.3 லட்சம் சேதம்

இதில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் தீ விபத்தானது மின்கசிவின் காரணமாக ஏற்பட்டு இருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்