ுதிய போக்குவரத்து சட்டம் மூலம் ரூ.3¼ லட்சம் அபராதம் வசூல்
குமரி மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியவர்களிடம் இருந்து புதிய போக்குவரத்து சட்டம் மூலம் ரூ.3 லட்சத்து 17 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியவர்களிடம் இருந்து புதிய போக்குவரத்து சட்டம் மூலம் ரூ.3 லட்சத்து 17 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
போக்குவரத்து விதி மீறல்
தமிழ்நாட்டில் மோட்டார் வாகன புதிய சட்டத்திருத்தத்தின் படி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் நேற்றுமுன்தினம் மாவட்டம் முழுவதும் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் செட்டிகுளம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, கோட்டார், வடசேரி உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி நாகர்கோவில் மாநகர பகுதியில் மட்டும் 64 பேரிடம் ரூ.64 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ரூ.3¼ லட்சம் அபராதம்
அதேபோல் கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் ஆகிய சப்-டிவிசனுக்குட்பட்ட பகுதிகளிலும் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 317 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இருசக்கர வாகனத்தின் பின்னால் ஹெல்மெட் அணியாதவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.
அதன்படி நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ரூ.3 லட்சத்து 17 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 197 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.