மான் கொம்பு வைத்திருந்த விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

பேரணாம்பட்டு அருகே மான் கொம்பு வைத்திருந்த விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-07-11 11:55 GMT

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு வனப்பகுதியையொட்டி, கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (வயது 47) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம், மற்றும் வீடு உள்ளது.

இவரது வீட்டில் மான் கொம்பு வைத்திருப்பதாக பேரணாம்பட்டு வனசரகர் சதீஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அவர், வனவர்கள் இளையராஜா, சரவணன், தயாளன், வனகாப்பாளர்கள் வெங்கடேசன், ஞானவேல் ஆகியோருடன் கோட்டையூர் கிராமத்தில் உள்ள மூர்த்தி வீட்டில் சோதனையிட்டனர்.

அப்போது புள்ளி மான் கொம்பு பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வனத்துறையினர் மான் கொம்பை பறிமுதல் செய்து, மூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தியதில் வனப்பகுதியையொட்டி விவசாய நிலம் உள்ளதால் காட்டில் தனக்கு மான் கொம்பு கிடைத்தாக கூறினார்.

மாவட்ட வன அதிகாரி கலாநிதி உத்தரவின் பேரில் மூர்த்திக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்