மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் திருவிழா

மயிலாடும்பாறை அருகே உப்புத்துறை கிராமத்தில் மாளிகைபாறை கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. நேற்று ஆடி அமாவாசையையொட்டி, கோவிலில் திருவிழா நடைபெற்றது.

Update: 2023-08-17 00:30 GMT

மயிலாடும்பாறை அருகே உப்புத்துறை கிராமத்தில் மாளிகைபாறை கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. நேற்று ஆடி அமாவாசையையொட்டி, கோவிலில் திருவிழா நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு கருப்பசாமி சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. அதேபோல பக்தர்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். பூசாரி கருப்பசாமி அரிவாள் மேல் ஏறி நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கினார்.

தொடர்ந்து நேற்று மாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். விழாவில் நேற்று முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவையொட்டி தேனியில் இருந்து உப்புத்துறைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மயிலாடும்பாறை, வருசநாடு, கடமலைக்குண்டு ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்