சங்கராபுரம் அருகே மகனை கொடுவாளால் வெட்டிய தந்தை கைது

சங்கராபுரம் அருகே மகனை கொடுவாளால் வெட்டிய தந்தை கைது் செய்யப்பட்டாா்.

Update: 2023-06-06 18:45 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் செல்வம் (வயது 35). இவர்களுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று செல்வம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, இங்கு உனக்கு என்ன வேலை எனறு கூறி, செல்வத்தை திட்டி கொடுவாளால் கண்ணன் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து கண்ணனை (62) கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்