வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது

Update: 2022-09-20 18:36 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி, தொடர் இருமல், போன்ற நோய்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒருநாளைக்கு புறநோயாளிகளாக சுமார் 2,000 பேர் வந்து செல்கின்றனர். காய்ச்சலுக்கு மட்டும் உள்நோயாளிகளாக 50 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் 20-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள்.

இதே போல் ஆம்பூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்