மாடு மேய்க்க சென்ற விவசாயி திடீர் சாவு

திருக்கோவிலூர் அருகே மாடு மேய்க்க சென்ற விவசாயி திடீர் சாவு போலீசார் தீவிர விசாரணை;

Update:2023-01-09 00:15 IST

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள செங்கணாங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினவேல்(வயது 50). இதய நோயாளியான இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக அதே ஊரில் உள்ள வயல்வெளி பகுதிக்கு ஓட்டி சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கேயே மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரத்தினவேல் மனைவி சீதா கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினவேலுவின் சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்