லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி படுகாயம்

ஜோலார்பேட்டை அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி படுகாயம் அடைந்தார்.

Update: 2022-12-11 17:10 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி புள்ளான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சென்றாயன் (வயது 54), விவசாயி. இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பொன்னேரி ஏலகிரி மலை கூட்டுரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் உள்ள தடுப்பு மீது மோதி, எதிரே வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற லாரி மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவரை பொது மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து லாரி டிரைவர் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்