சுல்தான்பேட்டை அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

சுல்தான்பேட்டை அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

Update: 2023-08-22 19:00 GMT


சுல்தான்பேட்டை


சுல்தான்பேட்டை அருகே ஜல்லிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி (வயது 56). விவசாயி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்துள்ளார். இதனால் குமாரசாமிக்கும், அவரது மனைவி ஈஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில், கர்ப்பிணியான மகளை பார்ப்பதற்காக ஈஸ்வரி திருப்பூர் சென்று இருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் நேற்று முன்தினம் இரவு குமாரசாமி வீட்டில் உள்ள விட்டத்தில் துணியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்