மழையில் நனைந்த எம்ஜிஆர் சிலைக்கு குடை பிடித்த ரசிகர்...!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.

Update: 2022-08-11 08:35 GMT

நீலகிரி ,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், கோத்தகிரி அருகிலுள்ள டானிங்டன் பகுதிக்கு நேற்று மது போதையில் வந்த உள்ளூர் நபர் ஒருவர் பேருந்துக்காகக் காத்திருந்திருக்கிறார். அப்போது கொடநாடு சாலையிலுள்ள எம்.ஜி.ஆர் சிலை மழையில் நனைந்துகொண்டிருப்பதைக் கண்டிருக்கிறார். உடனடியாக, சிலை அருகில் சென்ற அந்த நபர், கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே சென்று சிலை அமைக்கப்பட்டுள்ள தூண் மீது ஏறியிருக்கிறார்.

தொடர்ந்து, கையில் வைத்திருந்த குடையை உயர்த்திப் பிடித்து எம்.ஜி.ஆர் சிலை நனையாதவாறு செய்திருக்கிறார். நீண்டநேரமாக சிலைக்குக் குடைபிடித்தபடி நின்றுகொண்டிருந்த இந்த நபரை போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

தற்போது இந்த வீடியோவோடு சேர்த்து அந்த நபரும் வைரலாகிவருகிறார்.

மது போதையில் இருந்தாலும் எம்.ஜி.ஆர் சிலை நனையக் கூடாது என குடைபிடித்த ரசிகரை வலைவீசித் தேடிவருகின்றனராம் உள்ளூர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!

Tags:    

மேலும் செய்திகள்