மோட்டார் சைக்கிள்கள் மோதல்; முதியவர் பலி

பெரியகுளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.

Update: 2023-02-10 19:30 GMT

பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டை நேருநகரை சேர்ந்தவர் சின்னவர் (வயது 60). கூலித்தொழிலாளி. நேற்று இவர், தனது மோட்டார் சைக்கிளில் பெரியகுளத்தில் இருந்து நேருநகர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். எதிரே இ.புதுக்கோட்டையை சேர்ந்த பிரகாஷ் (24) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அப்போது 2 பேரின் மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சின்னவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரகாஷ் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது படுகாயம் அடைந்த பிரகாசை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோல் சின்னவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்