பயன்பாடின்றி கிடக்கும் சுகாதார வளாகம்
பயன்பாடின்றி கிடக்கும் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெமிலி அருகில் உள்ள வேப்பேரி கிராமத்தில் 2011-12-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் மகளிர் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் ரூ.1.63 லட்சத்தில் கட்டப்பட்டது. சிறிது காலம் மக்கள் பயன்பாட்டில் இருந்தது. இடையே, சுகாதார வளாகத்தை மூடி விட்டனர். அங்குள்ள மக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். சுகாதார வளாகத்தை திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.