இருதரப்பினர் இடையே தகராறு; 3 பேர் மீது வழக்கு

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-02-15 19:03 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூரை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், வைத்திலிங்கத்தின் மனைவி மயிலாயி (வயது 60) சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மயிலாயி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் மயிலாயி தாக்கியதில் 14 வயது சிறுவன் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் மீது தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்