விஷம் குடித்து மாற்றுத்திறனாளி தற்கொலை

விஷம் குடித்து மாற்றுத்திறனாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-19 19:00 GMT

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் மேலத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 49). மாற்றுத்திறனாளியான இவர் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமம் அடைந்துள்ளார். இதையடுத்து அவரது தண்டுவடம் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக அவதியடைந்து வந்துள்ளார். பல மருத்துவமனைகளில் காண்பித்து மருந்து, மாத்திரைகள் உட்கொண்டும் குணமாகாததால் அவர் விரக்தியுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது, விவசாய நிலத்திற்கு தெளிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை (விஷம்) சதீஷ்குமார் குடித்துவிட்டு, வீட்டில் மயங்கி கிடந்தார். இதைக்கண்ட உறவினர்கள் உடனடியாக சதீஷ்குமாரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் சதீஷ்குமாரின் அண்ணன் மகாராஜன் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்