30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு
30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வம் என்பவருக்கு சொந்தமான 30 அடி ஆழமுள்ள கிணற்றில் மான் ஒன்று தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அப்பகுதி மக்கள் உதவியுடன் கிணற்றில் தத்தளித்து கொண்டு இருந்த மானை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு அரியலூர் வனத்துறை அலுவலர் தேவி தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.