நாய்கள் துரத்தியதில் மான் கிணற்றில் விழுந்து சாவு
தேவரிஷிகுப்பத்தில் நாய்கள் துரத்தியதில் மான் கிணற்றில் விழுந்து இறந்தது.
கே.வி.குப்பத்தை அடுத்த தேவரிஷிகுப்பம் கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து 2 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் தண்ணீர் தேடி வந்தது. அதை நாய்கள் துரத்திச் சென்று கடித்தது. இதனால் காயம் அடைந்த மான், நிலைதடுமாறி அருகில் இருந்த தரை கிணற்றில் விழுந்தது. இதுகுறித்து குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வன அதிகாரிகள் வடிவேலு, கோபி ஆகியோர் வந்து மானை கிணற்றில் இருந்து மீட்டனர். ஆனால் அதற்குள் மான் இறந்துவிட்டது.