கிணற்றில் தவறி விழுந்த மான் சாவு

கிணற்றில் தவறி விழுந்த மான் இறந்தது.

Update: 2023-04-19 19:57 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் மலை அடிவாரத்தில் உள்ள மேல தொட்டியபட்டி கிராமத்தில் விவசாய பகுதியில் மான்கள் கூட்டம், கூட்டமாக குடிநீருக்காக இறங்கி வந்தது. இந்நிலையில் தாய் மான் மற்றும் குட்டி மான் தவறி கிணற்றிற்குள் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறை அதிகாரி குருசாமி தலைமையில் தீயணைப்புத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கி மான்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் குட்டி மான் பரிதாபமாக இறந்தது. தாய் மானுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்