ஆபத்தான பள்ளம்
ஆபத்தான பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள பாபு நகர் பகுதியில் பூங்கா உள்ளது. அந்தப் பூங்காவுக்கு செல்லும் சாலையின் குறுக்கே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அந்தக் கால்வாய் மேல் போடப்பட்ட கான்கிரீட் சிலாப் உடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்க வில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிதாக கால்வாய் கட்ட வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.