அரக்கோணம்
மின் வயரில் சிக்கி பசு மாடு பலியானது.
அரக்கோணத்தை அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவர் பசு மாடு வளர்த்து வருகிறார். நேற்று அப்பகுதியில் இருந்த விவசாய நிலத்தில் பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது மழையால் நிலத்தில் அறுந்து கிடந்த மின் வயரில் பசு மாடு சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே இறந்தது. இது போல் அரக்கோணத்தை அடுத்த பருத்திபுத்தூர் கிராமத்தை சேர்ந்த தேவகிக்கு சொந்தமான பசுமாடு நேற்று முன்தினம் இரவு முதல் மாயமானது. மாட்டை தேடிச்சென்றபோது வீரா நாயுடு கண்டிகை தேவதானம் ஏரியின் அருகில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் அளித்த புகாரின்பேரில் இறந்த பசு மாடு உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.