ஆலடி அருகே இருதரப்பினரிடையே தகராறு; 9 பேர் மீது வழக்கு

ஆலடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-12-10 18:45 GMT


ஆலடி, 

ஆலடி அருகே உள்ள புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன்கள் ரங்கநாதன்(வயது 63), வேணுகோபால் (47). வேணுகோபால் அதே பகுதியில் உள்ள முருகன் கோவிலில் தர்மகர்த்தாவாக இருந்து வருகிறார். ரங்கநாதன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதாக தெரிகிறது. இதனால் அண்ணன்-தம்பி இடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வருகிறது.

சம்பவத்தன்று ரங்கநாதன் தரப்பினருக்கும், வேணுகோபால் தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த வேணுகோபால், ரங்கநாதன் ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகார்களின்பேரில் இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்