திட்டக்குடி அருகேவீடு புகுந்து கல்லூரி மாணவி பலாத்காரம்வாலிபர் மீது வழக்குப்பதிவு

திட்டக்குடி அருகே வீடு புகுந்து கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-03-11 20:33 GMT

திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே உள்ள புலிவளம் பகுதியை சேர்ந்தவர் அருள் மகன் அமர்நாத் (வயது 21). டிப்ளமோ படித்துள்ள இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூலி அந்த மாணவியை, அமர்நாத் பலமுறை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

அதேபோல் சம்பவத்தன்றும் வீட்டில் மாணவி தனியாக இருப்பதை அறிந்த அமர்நாத், வீடு புகுந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு அவர் திருமணத்திற்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி, திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அமர்நாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்